வசூலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்..! ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan
ponniyin selvan

தமிழ் சினிமா அண்மை காலமாக நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறது அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க படும் திரைப்படம் பொன்னியின் செல்வன் தான் இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயராம், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் வெளி வருவதற்கு முன்பாக படகுழு பர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் ட்ரைலர் போன்றவற்றை வெளியிட்ட நிலையில் அடுத்ததாக போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளை ஜோராக நடத்தி வருகிறது. தமிழ்நாட்டைச் சுற்றியே பிரமோஷன் செய்து வந்த நிலையில் தற்பொழுது படக்குழு கேரளா ஹைதராபாத் மும்பை ஆகிய இடங்களில் ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகிறது.

அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன இதனால் தற்போது பல்வேறு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் ப்ரீ புக்கிங் செய்து வருகின்றனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்றால் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஃப்ரீ புக்கிங் மட்டுமே..

மிகப்பிரமாண்டமான வசூலை அள்ளி உள்ளதாம் இதுவரை மட்டுமே ப்ரீ புக்கிங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது வருகின்ற நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்..