வரலாறு காணாத வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்.!

ponniyin-selvan
ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் ட்ரெய்லர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது என்றுதான் சொல்ல வேண்டும் அனால் அதை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்ததா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்து வந்த நெட்டிசன்கள் அதையெல்லாம் தாண்டி மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் இரண்டு மில்லியன் டாலர்கள் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதே போன்று எந்த ஒரு தமிழ் படமும் நிகர்த்த வில்லை என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு மில்லியன் டாலர் அமெரிக்காவிலிருந்து வசூல் வரவில்லையாம். இந்நிலையில் பொன்னின் செல்வன் திரைப்படம் உலகம் எங்கும் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது இதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாக்கம் இரண்டிற்கு ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்று வரும் நினையில் பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போ வரும் என ரசிகர்கள் கேக்க ஆரம்பித்து விட்டனர்.