அடுத்த வசூல் வேட்டைக்கு ரெடியாகும் பொன்னியின் செல்வன் – 2.? ரீலிஸ் தேதி இதோ..

ponniyin-selvan-
ponniyin-selvan-

திரை உலகில் இருக்கும் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே உண்மை மற்றும் நாவலை மையமாக வைத்து படங்களை எடுக்கின்றனர். அதில் ரொம்பவும் கை தேர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் இப்பொழுதும் கூட கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்துள்ளார்.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அவர் சொன்னபடியே முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்தனர்.

படம் எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக இருந்ததால் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் மேலும் நல்ல விமர்சனமே இதுவரையும் படம் பெற்று வருகிறது இதனால் இந்த படத்திற்கான மவுசு குறையாமல் படம் ஜோராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் அடித்து நொறுக்கிறது. இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம்.

கிட்டத்தட்ட 350 கோடி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த அனைவரும் இரண்டாவது பாகம் எப்போது வெளிவரும் என காத்துக் கொண்டிருக்கின்றனர் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

அதை வைத்து பார்க்கும் பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாவது படத்திற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.  இரண்டாவது பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.