இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைபடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
தற்போது வரையிலும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்கியின் நாவலை தழுவி உருவாக்கிய இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்திற்கான கதாபாத்திரமாகவே நடித்துள்ளனர் என்று பலரும் பாராட்டி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு இன்ப செய்தி தற்போது உலா வருகிறது.
அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ott ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று தகவல்கல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசன் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆக உள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமேசான் பிரைம் வீடியோவை பின் தொடர்பாளர்களாக இருந்தாலும் பணம் செலுத்தி தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க முடியும் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ott எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாகவும் தற்போது வந்துள்ளது இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.