இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அது பெயரில் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில் இரண்டாவது பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம் அவர்கள் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மன், கார்த்தி வந்தயத்தேவன்- வல்லவராயன், சரத்குமார் பெரிய பழவேட்டரையர், உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினி,கதாபாத்திரத்திலும் திரிஷா குந்தவை பிராட்டியார், கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி, கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படி ஒட்டு மொத்த சினிமா பிரபலங்கள் சேர்ந்து நடித்து மிக பிரம்மாண்டமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாக உள்ளது. முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் இயக்குனர் மணிரத்தினம். இந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகலான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் லுக் அவுட் நாளைக்கு வெளியாக உள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது படக்குழு. ஆம் நாளை மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் லுக் அவுட் வெளியாகும் என படக்குழு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் அவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.