இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் 20 வருட கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது அந்த வகையில் முதல் பாகத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் அங்கு பார்ப்போர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்தினை பிரம்மாண்டமான புகைப்படங்களுடன் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மூன்று வருட கடின உழைப்பினால் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பல வரலாறு சுவடுகள்,வீரம் நிறைந்த தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் ஆகியோர்களை மையமாக வைத்து அனைவருக்கும் எளிதில் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கியுள்ளார்கள்.
இதன் காரணமாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பவுடன் இருந்தது வரும் நிலையில் இந்த படம் ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், பார்த்திபன் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர், பொன்னி நதி பாடல் மற்றும் சோள சோழ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது மேலும் அந்த விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இப்படிப்பட்ட நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமாக அரண்மனை செட்டுகளுடன், வண்ண வண்ண லைட்டுகள் என பார்ப்போர்களை பிரமிக்க வைத்துள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் அந்த படத்தில் நடித்துள்ள அனைத்து பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மேலும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராயும் வருகை தந்துள்ளார் மேலும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக போடப்பட்ட செட்டப் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.