பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் பல படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் தற்போது மணிரத்தினம் இயக்கி வெளிவந்து வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று நாவலை தழுவி படமாக எடுக்கப்பட்டதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த படத்தை பார்த்தனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்..
மற்றும் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, ஜெயராம், கிஷோர் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தையே இதுவரை பெற்று வருகிறது. அதன் விளைவாக இந்த படத்தின் வசூலும் பட்டி தொட்டி எங்கும் அள்ளுகிறது.
தமிழில் விக்ரம் படத்திற்கு பிறகு அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக இந்த படம் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 460 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளி 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை படைக்கும் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்பொழுது OTT தளத்தில் வெளிவரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான தகவலும் கிடைத்துள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற நவம்பர் நான்காம் தேதி ஓடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மன்றம் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.