மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை ஈட்டியது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் குந்தவையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை திரிஷா. நடிகை திரிஷா ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உயர்ந்த மார்க்கெட்டில் இருந்து வந்தாலும் சில காலங்களாக தமிழில் சொல்லும் அளவிற்கு இவருடைய திரைப்படங்கள் வெளிவரவில்லை.
எனவே இவர் அக்கடதேச மொழி படங்களில் நடித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றியினை கண்டுள்ளார். இவ்வாறு முதல் பாகத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்ட நிலையில் அதன் பிறகு தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் பட குழுவினர்கள் அனைவரும் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு த்ரிஷா எங்கு சென்றாலும் ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்ட பல கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம் அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் கொண்டவையாக நடிப்பதற்காக முதல் பாகத்திற்கு மட்டும் 2.5கோடி சம்பளம் பெற்றாராம்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் சொல்லும் அளவிற்கு திரிஷாவின் காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் இரண்டாவது பாகத்தில் அதிக முக்கியத்துவம் குந்தவைக்கு இருந்து வருவதால் 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம் இவ்வாறு முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் நடித்ததன் மூலம் திரிஷா மொத்தமாக 5.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.