உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் இத்தனை கோடியா.? அண்ணாந்து பார்க்கும் சினிமா உலகம்..

ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகில் எப்போதுமே வரலாற்று கதைகளுக்கு  நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் பல உண்மை மற்றும் நாவல் கதைகளை மையமாக வைத்து படங்களை எடுத்திருந்தாலும்..

இப்பொழுது அவர் எடுத்தது பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருக்கிறார். இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். முதல் பாகம் நேற்று கோலாகலமாக  வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா பிரகாஷ் ராஜ், சரத்குமார்,  விக்ரம் பிரபு, ஜெயராம், கிஷோர், பிரபு..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக முதல் நாளில் நல்ல வசூலையும் தட்டி தூக்கி உள்ளது தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 27 கோடியை வசூல் இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் நாட்டையும் தாண்டி மற்ற இடங்களில் நல்ல வசூல் செய்துள்ளது எனது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 75 கோடி வசூலித்திருப்பதாக   கூறப்படுகிறது.. வருகின்ற நாட்களில் சனி, ஞாயிறு என்பதால் அடுத்தடுத்த நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னமும் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது பல்வேறு சாதனைகளை பொன்னியின் செல்வன் படைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.