பொன்னியின் செல்வன் படம் எனக்கு திருப்தி தரவில்லை..! நான் பார்த்த விஷயங்கள் இதுதான் – ஜெயம் ரவி பேச்சு..

ponniyin selvan
ponniyin selvan

வரலாற்று கதைகள் மற்றும் உண்மை சம்பவங்கள் படமாக எடுக்கப்பட்டால் அது நல்ல வரவேற்பை பெறுகிறது மணிரத்தினம் இதுவரை எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது அவரது கனவு ஒரு வழியாக அதற்க்கு சரியாக திட்டமிட்டு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்தார்.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டார். அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது. இந்த நாவல் கிட்டத்தட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் புத்தகத்தில் எப்படி இருந்ததோ அதையே படமாக எடுத்திருந்தனர்.

இதனால் அனைவரும் இந்த படத்தை ஈசியாக புரிந்து கொள்ள முடிந்தது மேலும் படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, விக்ரம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாரதிபன், பிரபு, கிஷோர், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலமே நடித்திருந்தது.

படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடியதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்தது இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் 500 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவந்து கொஞ்ச நாட்கள் பிறகு ஜெயம் ரவி ஒரு பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதில் அவர் சொன்னது பொன்னியின் செல்வன் முதல் பாகம் எனக்கு திருப்தி தரவில்லை.. அதில் செய்த தவறுகள் மட்டும் தான் என் கண்ணில் பட்டது என கூறினார். எனினும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது தனக்கு சந்தோஷத்தை கொடுத்து உள்ளதாக அவர் சொன்னார். ஜெயம் ரவி உடன் மணிரத்தினமும் அந்த பேட்டியில் கலந்து கொண்டார். அவர் சொன்னது இதை சொன்னதற்கு மிகவும் நன்றி என அவர் குறிப்பிட்டார்.