அண்மை காலமாக சிறந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் வெளிவந்து வெற்றியை ருசிகின்றன அந்த வகையில் கமலின் விக்ரம் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக வசூலில் 400 கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை தொடர்ந்து பெரிய அளவில் எதிர்பார்த்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இந்த படம் நேற்று கோளாக்காலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது படத்தை பார்த்த பலரும் நல்ல விமர்சனத்தை கொடுப்பதால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வண்ணமே உள்ளது. வருகின்ற நாட்களில் சனி, ஞாயிறு என்பதால் கூட்டம் இந்த படத்தை பார்க்க அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் 21.21 கோடி வரை வசூலித்திற்கும் என கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் முதல் நாளில் அதிக அளவு வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அஜித் படத்தின் வசூலை கூட முந்த முடியாமல் இருக்கிறது இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக அஜித்தின் வலிமை திரைப்படம் இருக்கிறது.
இந்த படம் முதல் நாளில் 36.17 கோடி ரூபாய் வசூல் அள்ளி முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் விஜயின் பீஸ்ட் படம் 26.40 கோடிகள், மூன்றாவது இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 21.21 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. நான்காவது இடத்தில் தான் விக்ரம் 20.61 திரைப்படம் முதல் நாளில் கோடி வசூல் செய்து இருக்கிறது.