இயக்குனர் மணிரத்தினம் திரை உலகில் எத்தனையோ படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக என்றால் இல்லை. இவர் கடைசியாக வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்தார். இந்தப் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.
இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அவர் நினைத்தது போலவே முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படம் பாகுபலி ரேஞ்சிக்கு இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் அதை தத்துவமாக மணிரத்தினம் எடுத்தார்.
படமும் சிறப்பாக இருந்ததால் மக்களும்,, ரசிகர்களும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அதன் காரணமாகவே இந்த படம் அனைத்து இடங்களிலும் வசூல் பேட்டை நடத்தியது தற்பொழுது வரையிலுமே பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம்.
இதுவரை எவ்வளவு வசூல் வேட்டை நடத்தி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை மட்டுமே ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 460 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற தீபாவளிக்கு எத்தனை புது படங்கள் வெளிவந்தாலும்..
பொன்னியின் செல்வன் படத்தை அடித்துக் கொள்ள முடியாது என கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களிலேயே 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் எனவும் சொல்லி வருகின்றனர் இதனால் படகுழுவும் சரி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.