தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் பெண் இயக்குனர்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் சுதா கோங்கரா. இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சூரரை போற்று திரைப்படம் இவருக்கு நேஷனல் அவார்ட் வாங்கி கொடுத்த ஒரு படம் மேலும் இந்த படம் பல விருதுகளையும் அள்ளி அசத்தியது.
இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் OTT தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படம் இப்பொழுதுமே பலருக்கும் பிடித்த திரைப்படமாக இருந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து பிரபல நடிகை ஒருவர் பேசியிருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் ஹீரோயினை தேர்ந்தெடுக்க ஆடிஷன் வைத்துள்ளனர் அப்பொழுது ஐஸ்வர்யா லட்சுமி இந்த ஆடிஷனல் கலந்து கொண்டாராம்..
ஆனால் அப்பொழுது அந்த ஆடிஷனில் இவர் தேர்ந்தெடுக்கப்பட வில்லையாம்.. காரணம் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் ஆகவில்லை.. மேலும் மதுரை வட்டார மொழி ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெரியவில்லையாம் இதனால் அந்த படத்தில் அவர் கமிட்டாக முடியாமல் போனது என் சமீபத்தில் பேட்டி ஒன்று அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த படத்தை அவர் தவற விட்டிருந்தாலும் அதன் பிறகு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து வெற்றியை ருசித்து உள்ளார். தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதால் வருகின்ற காலங்களிலும் இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.