மணிரத்னம் இயக்கத்தில் நிறைய திரைப்படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் இவரது இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்ததை தொடர்ந்து விமர்சன ரீதியாக மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து பார்த்தால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளதாம்.
அங்கு சில மணி நேரத்திலேயே சுமார் சுமார் 3,000 டிக்கெட் விற்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.அதன்படி பார்த்தால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 65 டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து பார்த்தால் தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் அதேபோல் தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.இந்த இரண்டாம் பாகம் சுவாரசியமான திருப்பங்கள் உடன் இருக்கும் என பலரும் நம்புகிறார்கள்.
அதற்கு ஏற்றது போல் மணிரத்னம் அவர்களும் மிகவும் பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,பிரகாஷ்ராஜ், சரத்குமார்,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்களும் தற்பொழுது மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர்களது சம்பளமும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.