உண்மை மற்றும் வரலாற்று கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்து விட வேண்டும் என்பதுதான்.
பல தடவை இதற்காக முயற்சித்தாலும் தோல்வியை சந்தித்தார் ஒரு வழியாக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான “லைகா” உடன் கூட்டணி அமைத்து பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக எடுத்தார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் என சொன்னது அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யும் என பட குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது ஆனால் தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் சின்ன சின்ன வேலைகள் பாக்கி இருக்கிறதாம்.
அதை சரி செய்வதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது ஆனால் இதில் தான் பெரிய பிரச்சினையை எழுந்துள்ளது அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஜெயம் ரவி மற்றும் விக்ரம் போன்றவர்கள் அடுத்தடுத்த புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். விக்ரம் தங்கலான், ஜெயம் ரவி இறைவன் படத்தில் படும் ஜோராக நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன சின்ன வேலைகள் இழுபறியில் கிடைக்கிறதாம் இதனால் சொன்ன தேதியில் பொன்னியின் செல்வன் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஆனால் தற்பொழுது மணிரத்தினத்திற்கு ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பெரிய குடைச்சலை கொடுத்திருக்கின்றனர்.