மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகிய நிலையில் தற்பொழுது இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைமுடன் வெளியானது இதனை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் ரன்னிங் டைம் பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அதாவது பொன்னியின் செல்வன் முதல் பாகம் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ரன்னிங் டைம் வெளியானது ஆனால் இந்த இரண்டாவது பாகம் 3 மணி நேரத்துக்குள்ளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மொத்தம் 3மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஓடும் என ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
இவ்வளவு நேரம் ரசிகர்களால் உட்கார்ந்து படத்தை பார்க்க முடியாது சோர்ந்து விடுவார்கள் என்பதால் மீண்டும் இந்த இரண்டாம் பாகம் எடிட்டிங் வேலை செய்யப்பட்டு வருகிறதாம் அதன்படி பார்த்தால் இந்த இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 37 நிமிடம் வரை ரன்னிங் டைம் இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் பாதி 1.19 நிமிடமும் இரண்டாம் பாதி 1.18 நிமிடமும் ஓடும் என தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.மேலும் இந்த ரன்னிங் டைமை பற்றி மணிரத்னம் இன்னும் முடிவு செய்ய வில்லையாம். ஒருவேளை அவர் ரன்னிங் டைமை இன்னும் குறைத்துவிட்டு மூன்றாம் பாகத்திற்கு சென்று விடலாமா எனவும் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் மணிரத்னத்தின் இந்த முடிவால் லைக்கா நிறுவனமும் தற்பொழுது மிக ஆழ்ந்த குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஒரு சில ரசிகர்கள் இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால் மூன்றாம் பாகத்தை காத்திருந்து பார்க்க மாட்டார்கள் என தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.