தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கிய நிலையில் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.
இதனால் படக்குழு சேர்ந்த பலரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக பிரமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் எந்தெந்த ஊருக்கு படகுழு செல்ல இருக்கிறது என்பது குறித்த ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.
ப்ரோமோஷனில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளில் திரையிடப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
மேலும் படம் வெளியாகி வெற்றி பெற பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதனை தொடர்ந்து இவர்கள் இரண்டாவது பாகத்திலும் காணப்படுகிறது ஆகையால் இவர்கள் அனைவரும் தற்போது பிரமோஷன் நிகழ்ச்சியில் மிக தீவிரம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.