இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு வரலாற்று கதையை எடுத்து ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் மணிரத்தினம்.
நீண்ட ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்த படம் திரையரங்குகளில் ஓடி நன்றாக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகம் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என பொன்னியின் செல்வன் படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு மேடைப்பேட்டையில் கூறியுள்ளார்.
ஆனால் தற்பொழுது உள்ள நிலவரப்படி பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் முன்கூட்டியே ரிலீசாக உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதல் பாகத்தில் 500 கோடி வரை வசூல் செய்த பொன்னியின் செல்வன் திரைப்படம் டிஜிட்டல் உரிமை மட்டும் 125 கோடிக்கு மேல் விலை போயிருந்தது இதனால் இந்த படத்திற்கு 125 கோடி லாபமாக கிடைத்துள்ளதாக பட குழு கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்கான டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிகார்டிங், பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் சென்னை மற்றும் மும்பை ஸ்டூடியோகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த பட குழு அதற்கு ஓரிரு மாதங்கள் முன்கூட்டியே வெளியிட முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.