சினிமா உலகில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதனைத் தொடர்ந்து பார்ட் 2, பார்ட் 3 போன்ற படங்கள் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் சிறு இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன்.
இரண்டாவது பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு என பல முன்னணி பிரபலங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்திருந்தனர் படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
அதனால் சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்க்க தற்போது போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 20 கோடிக்கு மேல் வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது நல்ல ஓபனிங்காக இருந்தாலும் 2023 ல் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் அதிக வசூலை செய்துள்ள திரைப்படம் அஜித்தின் துணிவு தான் இருக்கிறது.
அந்த திரைப்படம் சுமார் – 25.60 கோடியும், இரண்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் பார்ட் 2 – 21. 58 கோடி வசூல் செய்துள்ளதாகவும் மூன்றாவது இடத்தில் வாரிசு – 20.44 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Updated Top 3 TN Openings 2023
1. #Thunivu – 25.60Cr
2. #PonniyinSelvan2* – 21.58Cr
3. #Varisu – 20.44Cr#AK62 #Leo— Indian Box Office (@IndiaboxOffice_) April 28, 2023