தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகைகள் நடித்து வந்தார்கள் பல இயக்குனர்களும் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.என கூறி கைவிடப்பட்ட கதைதான் இந்த பொன்னியின் செல்வன்.
இதனை தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது முழு திறமையால் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார்.ஆம் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் எனவும் அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் பின்பு வெளியாகும் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல நடிகர்களும் தங்களது காட்சியை முடித்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்கள்.இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இந்த திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
என்ன அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று கேட்டால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது கூடிய சீக்கிரம் இதற்கான பின்னணி வேலைகள் நடந்து படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்பொழுது ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.