தற்பொழுது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தினை பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்தினம் தனது கனவு திட்டமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி,பிரகாஷ்ராஜ், கார்த்திக்,ஐஸ்வர்யா ராய்,பச்சன் திரிஷா, விக்ரம்பிரபு என இன்னும் ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளார் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளை வைத்தும் பல கோடி பட்ஜெட்டில் ஒரு அழகான கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாளாக இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார்கள்.
எனவே முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திரைப்படத்தினை ரிலீஸ் செய்வதற்காக இறுதிகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது பொன்னின் செல்வன் படத்தின் திரையரங்கு உரிமையை சாதனை விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படம் திரையரங்குக்கு பிறகு டிஜிட்டல் உரிமைகளுக்கான இரண்டு பாகங்களையும் சேர்த்து ரூ 165 கோடிக்கு சூர்யாவின் பல படங்களை எஸ்டீம் செய்த பிரபல ஓடிடி இந்த டிஜிட்டல் உரிமைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.