80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் ஓடுபவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் பெரிதும் உண்மை மற்றும் நாவலை மையமாக வைத்து வரும் கதைகளை இயக்குபவர் அப்படித்தான் மணிரத்தினத்தின் கனவு பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்பதுதான்.
பல தடவை முயற்சித்தும் அந்த கனவு இப்பொழுதுதான் அவருக்கு நிறைவேறியது பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக படத்தை உருவாக்கி உள்ளார் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் கதைப்படி ஒரு ஹீரோ கிடையாது.
சுமார் 20க்கும் மேற்பட்ட ஹீரோக்கள் இந்த படங்களில் நடிக்கின்றனர் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்துகுமார், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன், கிஷோர் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய ஒரு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
ஆம் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ தற்பொழுது விற்கப்பட்டுள்ளது டிப்ஸ் நிறுவனம் சுமார் 24 கோடிக்கு விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். பிரபாஸ் நடித்த படம் அதிகபட்சமாக ஆடியோ ரைட்ஸ் சுமார் 19 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எதிர்த்து இப்பொழுது பீட் செய்து உள்ளது பொன்னியின் செல்வன் அப்படி என்றால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது இந்திய அளவில் அதிகரித்து உள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிய வருகிறது.