அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன அந்த வகையில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக பார்க்கப்பட்டது கமலின் விக்ரம் திரைப்படம் தான் இந்த படம் 410 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்திருந்தது..
ஆனால் அந்த சாதனையை கொஞ்ச நாட்கள் கூட நிலைத்து நிற்கவில்லை.. அந்த சாதனையை தற்பொழுது உடைத்தெறிந்து முதலிடத்திற்கு போய் உள்ளது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாற்று நாவல் கதை படமாக உருவாகியதால் இந்த படத்தை ரசிகர்கள், மக்கள் என தொடங்கி சினிமா பிரபலங்களும் போட்டி போட்டு பார்த்தனர்.
படம் சிறப்பாக இருந்த காரணத்தால் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் விளைவாக இந்த படத்தின் சொல்லும் உலக அளவில் இதுவரை 450 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்திருக்கிறது இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் வெற்றி கரமாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின..
இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை எந்த ஒரு படமும் தடுக்க முடியாமல் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று இந்த இரண்டு படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்தாலும்..
மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் நேற்று மட்டுமே 2 கோடியை தமிழகத்தில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.. வருகின்ற நாட்களிலும் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை தடுக்க எந்த படமும் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு, மணிரத்தினமும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறனர்..