வசூலில் பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் “பொன்னியின் செல்வன்” – 3 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan
ponniyin selvan

சினிமா உலகில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் ஒரு கனவு இருந்தது. அதுதான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் இதற்காக மணிரத்தினம் பல தடவை முயற்சித்து தோல்வியை சந்தித்தார்.

ஆனால் கடைசியாக மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன். படத்தை எடுத்தார் இதை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய்.

மற்றும் திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஜெயராம், பிரபு போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்றது. அதன் காரணமாக தற்போது வசூலும் அடித்து நொறுக்குகிறது.

தமிழை தாண்டி பல இடங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் அதிகரித்தது முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இரண்டாவது நாளில் 70 கோடிக்கு மேல் அள்ளியது இரண்டு நாள் முடிவில் 150 கோடி வசூல் அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாவது நாளில் வசூல் அதிகரிக்குமா குறையுமா?

என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்றாவது நாளும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி உள்ளது பொன்னியின் செல்வன் மூன்று நாள் முடிவில் மட்டும் ஓட்டு மொத்தமாக 230 கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் 3 நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாட்களிலும் பொன்னியின் செல்வன் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.