அண்மை காலமாக திரை உலகில் வரலாற்று கதைகள் படமாக எடுக்கப்படுகிறது. அந்த வகையில் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்திருந்தார் படம். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடினர்.
மேலும் தொடர்ந்து நல்ல விமர்சனத்தையே கொடுக்க ஆரம்பித்தனர் இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஹவுஸ் குள்ளாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடியது குறிப்பாக தமிழை தாண்டி பிற மொழிகளிலும் இந்த படம் வரவேற்பு பெற்றது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, விக்ரம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் படம் தொடர்ந்து சூப்பராக ஓடியதன் காரணமாக..
இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் சாதனை படைத்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 510 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 240 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனை நிகழ்த்தியுள்ளது என சொல்லப்படுகிறது இப்போதும் பல்வேறு திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் இந்த படம் இன்னும் சில கோடிகளை அள்ளும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..