ப்ரீ புக்கிங்கில் அசத்தும் “பொன்னியின் செல்வன்” – அதுக்குள்ளேயே இவ்வளவு வசூலா.?

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் அண்மைகாலமாக நாவல் மற்றும் உண்மை கதைகளை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என பலதடவை முயற்சித்தார்.

ஒரு வழியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், பிரபு, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு.

ஜெயராம் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல் டீசர் ட்ரைலர் ஆகியவை வெளியாகின ஒவ்வொன்றும் மிரட்டலாக இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

இருப்பினும் படக்குழு சென்னை கேரளா என பல்வேறு இடங்களுக்கு போய் படத்தை பிரமோஷன் செய்து கொண்டுதான் இருக்கிறது இப்படி இருப்பதால் இந்த படத்திற்கான அதிகரிப்பு இன்னும் வலுவாகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் படம் ரிலீஸ் தேதியை நெருங்கி விட்டதால் ப்ரீ புக்கிங் போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக USA – வில் ஃப்ரீ புக்கிங் இல் மட்டுமே இதுவரை $375K வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வெளிநாட்டிலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது நிச்சயம் தமிழ் சினிமாவில் ஃப்ரீ புக்கிங் – ல் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.