பொன்னியின் செல்வன் 2 எப்போது ரீலிஸ்.? குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்த படக்குழு

ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் உடனே அடுத்த பாகத்தை எடுக்கின்றனர் அந்த பாகமும் தற்போது வெற்றியை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன எடுத்துக்காட்டு பாகுபலி படம் வெளியாகி 500 கோடி வசூல் செய்தது ஆனால் பாகுபலி 2 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

கேஜிஎப் படமும் அதே போல் தான் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அதிரபுதியான  வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்  முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக  வெளியானது.

இதுவரை கதையாக படித்த மக்கள் முதல் முறையாக படமாக பார்த்தனர் அப்படியே எடுத்து வைத்திருந்தால் படம் மக்களுக்கு ரொம்ப பிடித்து போனதால் அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது. பொன்னியின் செல்வன் படம் ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்த.

இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என சொன்னது. இதனை அடுத்து பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன ஆனால் அவ்வப்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தாமதம் அதனால்  தேதி மாற்றம்.. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் நடிக்க வரவில்லை..

இதனால் பொன்னியின் செல்வன் தேதி மாறியதாக பல தகவல்கள் உலா வந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு இந்த செய்திகள் அனைத்தும் தவறு என படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் சொன்ன தேதியில் பொன்னியின் செல்வன் 2 வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.