இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பயணத்தை ஆரம்பித்தார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு சிறந்த படங்களை இயக்கி வெற்றிகண்டு தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடுகிறார்.
இவர் பெரிதும் நாவல் மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து பொன்னின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இதற்கு முன்பாகவே மூன்று தடவை எடுக்க முயற்சி செய்தார் சில காரணங்களால் அப்பொழுது முடியாமல் போனது எப்படியோ இந்த படத்தை ஒரு வழியாக எடுத்து அசதி உள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளனர் என பலரும் கூறி வருகின்றனர் இதுவரை இந்த படத்தில் இருந்து சில போஸ்டர்கள் மற்றும் டீசர் போன்றவை வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் முக்கிய விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் மேலும் இந்த படத்தின் டிரைலரை அவர் தான் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ரஜினி கமல் போன்ற முன்னணி பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.