இவ்வளவு பணத்தை போட்டு எடுத்தது இதற்காக தானா.! இவங்கள அடக்கவே முடியாதா என தலையில் அடித்துக் கொள்ளும் சூர்யா.!

ponmagal-vanthal-tamil360newz
ponmagal-vanthal-tamil360newz

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே ஆட்டி வைக்கிறது இந்த தமிழ் ராக்கர்ஸ், பல கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி உடனடியாக படம் வெளியிட்ட முதல் நாளே இவர்களும் வெளியிடுகிறார்கள், இதனால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் பல கோடி முதலீடு செய்து படத்தை எடுத்தால் போட்ட காசை எடுக்கவே பல நாட்கள் ஆகின்றன, ஆனால் இவர்கள் இப்படி பைரசி இணையதளத்தில் வெளியிடுவதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் மே 29ஆம் தேதி இரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் வெளியிட்டதால் அவசரஅவசரமாக அமேசான் பிரைமில்  பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

படத்தை அமேசான் ப்ரைம் வெளியிடுவதற்கு முன்பு எப்படி வெளியாகி இருக்கும் என விழிபிதுங்கி இருக்கிறது படக்குழு மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனம், இதனால் நடிகர் சூர்யா செம கடுப்பில் இருக்கிறார், ஏன் என்றால் காசு போட்டவருக்கு தானே தெரியும் அதன் அருமை.

படத்தை திரையரங்கில் வெளியிட்டால்தான் திருட்டுத்தனமாக காப்பியடித்து வெளியிடுகிறார்கள் என்றால் இணையதளத்தில் ஒளிபரப்பினால் கூட  இப்படி உடனடியாக வெளியிட்டு விடுகிறார்களே, அதனால் புது படத்திற்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.

அதனால் பொன்மகள்வந்தாள் படக்குழு பைரசி இணையதளத்தில் இருக்கும் படத்தை நீக்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.