2020 ஆம் ஆண்டு கோரணா தோற்று உலக நாடுகளையே உலுக்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலரும் அதனை கடைப்பிடித்து வந்தார்கள்.
அதுவும் சினிமா துறை முற்றிலுமாக முடக்கப்பட்டது சமீபத்தில் இருந்து தான் படப்பிடிப்பு மற்றும் சீரியல் என அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் திரையரங்குகள் சில மாத காலங்களாகவே திறக்காமல் இருந்தது இந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.
அதிலும் திரையரங்கில் 50 சதவீத இறுக்கைகளுடன் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது, இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள் ஏனென்றால் திரையரங்கில் கூட்டத்துடன் கூட்டமாக ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படம் பார்த்த அனுபவம் எல்லாறுக்கும் பிடிக்கும்.
ஆனால் இடைவெளி விட்டு உட்கார்ந்து படம் பார்ப்பதை பலரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் தமிழக முதல்வர் சமீபத்தில் 100 இரு கைகளுடன் படங்களை திரையரங்கில் வெளியிடுவதற்கு அனுமதித்துள்ளார்.
இது சினிமா ரசிகர்களை மிகவும் சந்தோஷம் அடையச் செய்துள்ளது, ஆனாலும் திரையரங்கில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கின்றது, ஒரு சில திரைப்படங்கள் OTT இணையதளமான ஹாட்ஸ்டார் மற்றும் நேரடியாக தொலைக்காட்சிகளிலும் புது படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.
அந்த வகையில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நான்கு திரைப்படங்களை காணலாம்.
மாஸ்டர் திரைப்படம் பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, அதேபோல் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியிடப் போகிறார்கள். அதேபோல் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
எனவே பொங்கல் தினத்தை ரசிகர்கள் புது திரைப்படங்கள் உடன் கொண்டாட இருக்கிறார்கள்.