அஜித் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் கொண்டாட்டம்தான்.!

ajith-vijay-surya
ajith-vijay-surya

தமிழ் சினிமாவின் முன்னனின் நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித், விஜய். அஜித் அவர்கள் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்சி இயக்கி உள்ள இந்த திரைப்படம் பொங்கலில் வெளியாக உள்ளது இதனால் அஜித் மற்றும் விஜய் அவர்கள் ஒன்பது வருடத்திற்கு பிறகு இந்த படங்கள் மூலம் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் அஜித் ரசிகர்கள் மட்டும் பொங்கல் விருந்து கிடையாது சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்து உள்ளது என்று ஒரு தகவல்கல் உள்ளது அதாவது சூரிய 42 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலில் ரிலீஸ் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்து விட்டது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்தவுடன் மறுபடியும் கோவாவில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டு பிறகு வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 42 திரைப்படத்தை தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் உருவாக இருக்கிறது இதனால் சூர்யா ரசிகர்கள் சூர்யா 42 படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பொங்கல் விருந்தாக சூர்யா படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதால்  ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.