பொங்கல் தினத்தில் மெகா ஹிட் திரைப்படத்தை ஒளிபரப்பி டி ஆர் பி இல் மாஸ் காட்ட போகும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

venthu-thaninthathu-kaadu
venthu-thaninthathu-kaadu

பண்டிகை நாட்கள் வந்தாலே பொதுவாக மக்கள் தங்களுடைய பொழுதுபோக்கை கழிக்க சினிமாவிற்கு செல்வார்கள் அதிலும் ஒரு சிலர் தொலைக்காட்சியில் புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ்வார்கள்.  அந்த வகையில் இன்று பொங்கல் தினம் என்பதால் மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் புது உடைகள் உடுத்தி சந்தோஷமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பொங்கலை வைத்து முடித்து விட்டு அடுத்ததாக மக்கள் பலரும் எந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் என பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய திரைப்படங்களை பண்டிகை நாட்களில் ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது கலைஞர் தொலைக்காட்சி இரண்டு மெகா ஹிட் திரைப்படத்தை பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பா இருக்கிறார்கள். கடந்த வருடம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்த இரண்டு திரைப்படங்களை தான் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

அதாவது மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வாசூல் வேட்டை நடத்திய பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படத்தையும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படத்தையும் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜனவரி 15 காலை 9 மணிக்கு திண்டுக்கல் லியோனியின் சிறப்பு பட்டிமன்றம் காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் நடித்த டான் பிற்பகல் 1:30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இவானா நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த லவ் டுடே அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படமும் 10 மணிக்கு ஆர்யா சுந்தர்சி நடிப்பில் வெளியாகிய அரண்மனை மூன்றாவது பாகம் திரைப்படமும் மதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றமும் ஒளிபரப்பாக இருக்கிறார்கள்.

புதிய திரைப்படங்களை காண மக்கள்  ஆவலுடன் இருக்கிறார்கள்