வழக்கமா பாலிமர் சேனல் தான் எல்லாரையும் வச்சி செய்வாங்க.! ஆனா இந்த முறை பாலிமர் சேனலையே வச்சு செய்கிறார்களே.! வீடியோ இதோ

polimer
polimer

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்து விட்டால் அதனை சோசியல் மீடியாவில் வைத்து பலரும் வச்சு செய்வார்கள். அதிலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை சொல்லவே வேண்டாம் அந்த அளவு கிழித்து தொங்க விடுவார்கள். பிரபலங்களைப் பற்றி விமர்சன வீடியோக்கள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த நிலையில் பிரபல செய்தி தொகுப்பாளரின் இரண்டு நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள் இணையதள வாசிகள் இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

பொதுவாக பாலிமர் தொலைக்காட்சி ஒரு சிறிய விஷயம் கிடைத்து விட்டாலே அதனை பெரிதாக கிண்டல் செய்தும் கேலி செய்தும் வீடியோவை வெளியிடுவார்கள் இந்த நிலையில் பாலிமர் நியூஸ் சேனலில் தங்களின் நியூஸ் சேனல் குறித்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் பாலிமர் வேல்ராஜ் தன்னுடைய அடுக்கு அடுக்கு மொழி பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

எதுகை மோனையாக பேசுவதில் வல்லவர் என்றே கூறலாம் அந்தளவு எதுகை மோனையாக பேசுவார் இந்தநிலையில் பாலிமர் செய்தி சேனலை நெட்டிசன்கள் வச்சு செய்துவருகிறார்கள் ஏனென்றால் பாலிமர் நியூஸ் சேனலில் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 2 நிமிடமாக அமைதியாக தனது செல்போனை பார்த்துக் கொண்டு பின் கடைசியாக எழுந்து தன்னுடைய முடியை சரி செய்வது போன்ற வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை பாலிமர் சேனல் லைவ் டெலிகாஸ்ட் செய்துள்ளார்கள் அப்பொழுது இந்த இரண்டு நிமிட வீடியோ நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரப்பிவருகிறார்கள இதனை பார்த்த பலரும் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். செய்தி வாசிக்கும் பொழுது ஏதாவது தவறு நடப்பது சகஜம் தான் ஆனால் இரண்டு நிமிடங்கள் எந்த ஒரு கவனமும் இல்லாமல் அமைதியாக இருப்பதை யாரும் பார்க்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.