அஜித் பட நடிகை மீது போலீசில் புகார்.. இதுதான் காரணமா.?

ajith
ajith

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் “ஆடுகளம்”. இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன ஆனால் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து டாப்ஸி நடித்து வருகிறார்.

அந்த வகையில் அஜித்தின் ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2 போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்த டாப்ஸி திடீரென தெலுங்கு, இந்தியில் போன்ற மொழிகளிலும் அதிக பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வெற்றி கண்டு வருகிறார். இதனால் நடிகை டாப்ஸியின் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையான டாப்ஸி அவ்வபோது சோசியல் மீடியா பக்கம் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அண்மையில் கூட  உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள மாதம் ஒரு லட்சம் செலவு செய்வதாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான ஆடையை அணிந்து அம்மன் உருவம் பொதிந்திய நெக்லஸை அணிந்து வந்தார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பெரிய அளவில் வைரலானது. புகைப்படத்தை பலரும் நடிகை டாப்ஸியை பலரும் சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஏகலைவா சிங் கவுர் என்பவர்  நடிகை டாப்ஸின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை டாப்ஸி “இந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்” என்று அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கத்தில் பூதாகரமாக வெடித்து பேசும் பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tapsee
tapsee