இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்தில் சிம்பு முத்துவீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் நார்மலாக வாழ்ந்து வரும் ஒருவன் எப்படி டானாக மாறுகிறான் என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் அனைத்து ரசிகர்களும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு சிம்பு இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உழைப்பை செலுத்தி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தின் நடிப்பதற்காக 20 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள் இவ்வாறு வெந்து தணிந்தது காடு தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் கமெண்ட்களை வருகிறது. மேலும் சமீபத்தில் கூட சிம்பு மற்றும் கௌதம் மேனன் இருவரையும் பாராட்டி சூர்யா தன்னுடைய பதிவை வெளியிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சில மணி நேரம் ஆன்லைனில் இந்த படத்தை கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். ஏராளமானவர்கள் விடுமுறை நாட்களில் இந்த திரைப்படங்களை பார்த்து விடலாம் என நினைப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸ்சில் பார்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் புதிய திரைப்படங்கள் ஆன்லைனில் கசிய விட தடை விதிக்க கோரி நீதிமன்றத்திற்கு செல்கின்றனர் படக் குழுக்கள்.
இருந்தாலும் படம் பசிவதை தடுக்க முடியவில்லை தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ரிலீசான சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் தமிழில் எப்பொழுதும் புதிய திரைப்படங்களை கசிய விடுவதை தமிழ் ராக்கர்ஸ் வழக்கமாக வைத்திருக்கிறது.