இந்த மூஞ்ச வச்சிக்கிட்டு சினிமாவுல நடிக்க வந்துட்டான்.. என்று நினைத்த வாலியை வாய்ப்பிளக்க வைத்த பிரபல நடிகர்.!

vaali
vaali

சினிமாவைப் பொறுத்தவரை யார் எப்படி பெரிய ஆளாக மாறுவார்கள் என சொல்லவே முடியாது ஏனென்றால் ஒரு திரைப்படம் அந்த பிரபலத்தை தூக்கிவிடும் மற்றொரு படம் கலவை விமர்சனத்தை கூறி மொத்தமாக அந்த பிரபலத்தை சினிமாவை விட்டு ஒதுக்கிவிடும். எனவே யார் எப்பொழுது எப்படி வேணாலும் சினிமாவைப் பொறுத்தவரை மாறலாம்.

மேலும் அந்த வகையில் வாரிசு நடிகர் நடிகைகளாக சினிமாவிற்கு அறிமுகமாவது மிகவும் எளிமையான ஒரு விஷயம் அப்படி வாரிசு பிரபலங்களாக அறிமுகமாகும் பெற்றோர்கள் சினிமாவில் நல்ல இடத்திலிருந்தால் அவர்களை தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள். ஆனால் சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவிற்கு வருவது மிகப்பெரிய கஷ்டம்.

வாய்ப்பிற்காக தல சினிமா கம்பெனிகள் ஏறி இறங்க வேண்டும் அப்படி வேலை கிடைத்தாலும் கூட சினிமா துறையில் போட்டி பொறாமை என்பது மிகவும் அதிகமாக இருக்கும் எனவே எளிதில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது சுலபம் இல்லை. எனவே சினிமாவை பொருத்தவரை சின்ன வேடத்தில் நடித்தால் கூட ஒரு இடத்தைப் பிடிக்க திறமை மட்டும் போதாது.

எனவே கடின உழைப்பு நம்பிக்கை விடாமுயற்சி மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் பேச்சி போன்றவை இருந்தால் மட்டுமே தங்களுக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் அப்படி திறமையை வைத்துக் கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காகாது. எம்ஜிஆர், சிவாஜி முதல் தனுஷ், சிம்பு வரை பலருடைய படங்களுக்கு பாடல் எழுதி ஹிட் பெற்றவர் தான் கவிஞர் வாலி.

இவர் எம்ஜிஆருக்கு பல பாடல்கள் எழுதி இருக்கும் நிலையில் அனைத்தும் சூப்பர் ஹிட் பெற்றது. இந்நிலையில் சென்னையில் இவருடன் தங்கி இருந்த ஒருவர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த பொழுது ஒல்லியான தேகம், முகப்பரு பிறகு, முகத்தில் சில தழும்புகள் போன்றவை இருந்ததால் சினிமா நடிகருக்கான எந்த லட்சணமும் முகத்தில் இல்லை எனவே இவரைப் பார்த்த வாலி இந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இவனெல்லாம் சினிமாவில் எப்படி நடிக்க ஆசைப்படுகிறான் என யோசித்தாராம்.

nagesh
nagesh

ஆனால் அதே நடிகர் பல படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாறி சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அவருடைய கால் ஷீட்டுக்காக காத்திருந்தார்களாம். அது வேறு யாருமில்லை நடிகார் நாகேஷ் தான் இவர் காமெடி, குணசத்திரம், வில்லன் என பல கேரக்டர்களின் நடித்து அசத்தியினார் நாகேஷ். கமலஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நாகேஷ் தான் தற்பொழுது வரையிலும் பல மேடைகளில் இவரை பற்றி பேசி உள்ளார்.