தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் தில் ராஜு இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார் மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் ஏன் அண்மையில் கூட பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படபிடிப்பு ஒரு பக்கம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தாலும் மறுபக்கம் தற்போது பட குழுவினரையும் விஜயையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அது என்னவென்றால் வாரிசு படத்திலிருந்து தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.
இதற்காக படகுழு பல புதிய கட்டுப்பாடுகளை போட்டிருந்தாலும் அதை எல்லாம் மீறி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு கொண்டுதான் இருக்கின்றனர் இதனால் வாரிசு படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி போய் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜயின் மகன் சஞ்சயை பலரும் சமூக வலைதள பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர் இவர் இவ்வாறு சொன்னது தற்பொழுது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் விஜய் ரசிகர்களும் தனது சமூக வலைதள பக்கத்தில் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ சஞ்சய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அந்த பதிவு..
#VarisuThirdLook pic.twitter.com/xgMg7pVSyg
— Vijay (@actorvijay) June 22, 2022