தமிழ் சினிமாவில் காதலின் அணுகுமுறையை அந்த காலத்தில் இருந்து மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் பேசிக்கொண்டே இருக்கும் காதல் மற்றும் பேசாமல் இருக்கும் காதல் பார்த்துக் கொண்டே இருக்கும் காதல் பார்க்காமல் காதல் என பல வகையான உணர்வுகள் காதலுக்கு உண்டு.
அந்த வகையில் இந்த காதல் உணர்வுகள் அனைத்தையுமே தெரியப்படுத்தவுதன் மூலம் நாம் கண்டு ரசித்திருப்போம். அந்த வகையில் சுமார் 80களில் காதலுக்கு ஒரு வித்தியாசமான இலக்கணத்தை உருவாக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.
இவ்வாறு அவருடைய படைப்பில் ஒரு காதல் காவியமாக வெளிவந்த திரைப்படம் தான் மௌன ராகம் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் மோகன் அதேபோல கதாநாயகி கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருப்பார் மேலும் இவர்கள் மூவருமே இந்த திரைப்படத்தில் காதலின் உணர்வு மிக நகர் பிரம்மாண்டமாக காட்டியிருப்பார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது காதலின் வலி படிவது மட்டும் இல்லாமல் காதலிக்கவும் தோன்றும் அந்த அளவிற்கு படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக அழகாக செதுக்கப்பட்டு இருக்கும்.
இப்படி ஒரு நிலையில் நடிகை ரேவதியிடம் ஒரு ரசிகர் மௌன ராகம் திரைப்படம் மறுபடியும் எடுக்க நேரிட்டால் நீங்களும் கார்த்திக்கும் நடித்த கேரக்டரில் எந்த நடிகர் தற்பொழுது நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகை ரேவதி அந்த திரைப்படம் ஒரு பொக்கிஷம் தயவுசெய்து அந்த திரைப்படத்தை யாரும் தொடாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.