நடிகர் வடிவேலு சினிமா உலகில் காமெடியனாக தனது பயணத்தை தொடர்ந்தார் எடுத்தவுடனேயே திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி கமல் ராஜ்கிரண் போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டு தொடர்ந்து காமெடியனாக பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரும் சும்மா நடித்து பார்க்கலாமென நடித்த அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாற தனது ரூட்டை மாற்றி ஹீரோவாக பயணித்தார் ஆனால் இடையில் வந்த பிரச்சனைகள் காரணமாக இவர் தமிழ் சினிமாவில் நான்காண்டு காலங்கள் நடிக்காமல் இருந்தார் ஒரு வழியாக லைகா நிறுவனம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண மீண்டும் தற்போது சினிமா உலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.
முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது அதனைத் தொடர்ந்து வடிவேலு நடித்து வரும் திரைப்படம் மாமன்னன் அதுவும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஆம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராம் பாலா இயக்கும் படத்தில் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை ஹீரோவாக காமெடியனாக நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இந்த படத்தின் மூலம் வில்லனாக திரையில் காணப்பட இருக்கிறார் இதனை பார்க்க ரசிகர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.