சீசன் 15 ஆவது IPLலில் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
லியம் லிவிங் ஸ்டன் இவர் இங்கிலாந்து அணியை சேர்ந்தவர். இவரை ஐபிஎல் இல் பஞ்சாப் அணி 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
டிம் டேவிட் இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இவரின் அடிப்படை தொகை 40 லட்சம். இவரை மும்பை இந்தியன்ஸ் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா அவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி 8 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த ரொமாரியோ ஷெபர்டை 7.75 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதேபோல் மேற்கிந்திய தீவுவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஓடின் ஸ்மித்தை பஞ்சாப் அணி 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிவம் துபே அவளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 19 வயது உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக யாஷ் தூல் அவர்களை டெல்லி கேப்பிடல் அணி 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் 30 லட்சம் ஏலம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டு அணியை சேர்ந்த ஷாருக்கான் பஞ்சாப் அணி 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும் 70 வீரர்கள் 10 அணிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நடராஜன், வாஷிங்டன், அஸ்வின், போன்ற பலரையும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.