Pithamagan : தமிழ் சினிமாவில் என்னம்மா கண்ணு, லவ்லி, ஆளு, பிதாமகன், லூட்டி கஜேந்திரா, என பல திரைப்படங்களை தயாரித்தவர் வி ஏ துரை மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திற்கு எக்சிகியூட்டிவ் ப்ரொடியூஸ்வராக பணியாற்றியுள்ளார். தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்த இவர் திடீரென நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு நிதி நெருக்கடியும் வந்துள்ளது அதற்காக பணம் கேட்டு சில வீடியோவையும் வெளியிட்டார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் இவருக்கு சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி கரம் நீட்டினார்கள். மேலும் இவர் மருத்துவமனை மற்றும் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் எனசிகிச்சை பெற்று வந்தார்.
நீரிழிவு நோய் இவருக்கு அதிகமானதால் ஒரு காலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார்கள் இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 9 மணி அளவில் உயிர் பிரிந்தார். அவருக்கு தற்பொழுது வயது 59 ஆகும். தயாரிப்பாளர் வி ஏ துரை அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் ஒருவர் பெயர் விஜயலட்சுமி மற்றொருவர் பெயர் லட்சுமி.
முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்ற இரண்டு மகள்களும் இருந்தார்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது அதேபோல் இரண்டாவது மனைக்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார் மேலும் துரை திரைப்பட சங்க உறுப்பினராக இருந்தவர் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இவரின் மறைவு சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கு பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.