தமிழ் ராக்கர்ஸ்சை தலைதெறிக்க ஓட வைத்த அமேசன்.! யாருகிட்ட வச்சிகிட்டீங்க.

tamil
tamil

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை ஆட்டிப் படைத்து வந்தது தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம், இந்த பைரசி இணையதளம் சினிமாவுக்கே தண்ணி காட்டி வந்தது.

அதனால் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள், அதுமட்டுமில்லாமல் கடும் நஷ்டத்தை அடைந்தார்கள், அதனால் இந்த இணையதளத்தை எப்படி முடக்கு வேண்டும் என முயற்சி செய்தார்கள் வேறொரு TLD உடன் அடுத்த நிமிடமே விடுவார்கள் அதனால் இவர்களை முடக்குவது என்பது மிக கடினமாக இருந்தது.

என்னதான் இவர்களை முடக்கினாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் வந்தார்கள். சினிமாவிற்கு தண்ணீர் காட்டிய இந்த இணையதளத்தை முன்னணி OTT இணைய தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம் முடக்கியுள்ளது, அதாவது அமேசான் ப்ரைம் நிறுவனத்தில் புதிய திரைப்படங்களை ஹெச்டி தளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டார்கள் ஆனால் அதே எச்டி தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளமும் படத்தை வெளியிட்டது.

இதற்குமுன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் எடுக்கப்பட்ட காட்சிகளை தான் வெளியீட்டு கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுது 4k என்ற எச் டி தளத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இதனை கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இரவு பகலாக மூன்று மாத தீவிர வேட்டையை ஆரம்பித்தார்கள் இப்படிப்பட்ட இணையதளத்தை வேரோடு முடக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

Digital Millennium Copyright Act (DMCA) என்னும் காப்புரிமையை காக்கும் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகார்களை கொடுத்துள்ளது அமேசான் பிரைம். இது தமிழ்ராக்கர்சின் அணைத்து தளத்தையும் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN)-ல் இருந்து மொத்தமாக எடுத்துள்ளது அமேசான்.

தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டுள்ளது இன்னும் சில தினங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படி ஒரே அடியாக முடக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதா இல்லை வேறு ஏதாவது பெயரில் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.