தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் தான் வர்ஷா. இவர் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். இவருடைய பாவனைகள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நஸ்ரியாவை போலவே இருப்பதால் நஸ்ரியாவின் தங்கை என்று ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.
இவர் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் ஒரு திரைப்படத்தில் கூற அவர் நடித்து வரும் கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இருப்பதில்லை எனவே இதன் காரணமான தரமான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக சினிமாவில் தொடர்ந்து நிலைத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம், அமைதிப்படை இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் போட்டோகிராபி பெண்ணாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடிகைகளில் இவரும் ஒருவர்.
காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் கட்டளையால் கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு அனுப்பவில்லை பிறகு அனைவரும் சம்மதத்துடனும் விஜய் பேசி இவரை விளையாடுவதற்கு அழைத்து செல்கிறார் இதில் சிறந்த நடிப்பை வர்ஷா.
பிறகு சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த செல்க்பி திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தனது கண்களை தானம் செய்துள்ளார். அதாவது இவர் “நாம் இறந்த பின்பும் உலகம் நம்மை பார்க்க வேண்டுமெனில் கண்களை தானம் செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் செய்யும் கண்தானம் ஒளி விளக்கை ஏற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்எனவே கண் தானம் செய்த நடிகை வர்ஷாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.