தீபாவளி ரேஸில் இருந்து விலகிய முக்கிய நடிகரின் படம்.? 4 படங்களில் ஒன்று அவுட்.!

tamil actors
tamil actors

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் வெளிவருகிறது என்றால் அதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சில முக்கிய நாட்களான பண்டிகை நாட்களில் டாப் நடிகர்களின் படம் வருகிறது என்றால் அந்த படம் அமோகமாக திரையரங்கில் ஓடும்.

அப்படி இந்தாண்டு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு பல நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. எந்தெந்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதை பற்றி பார்ப்போம். சர்தார் : நடிகர் கார்த்தி மற்றும் ராசி கண்ணா நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்டு வரும் சர்தார் படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

பிரின்ஸ் : சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வரும் டான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்தது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். வாத்தி : நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆனால் கடைசி நேரத்தில் இந்த முடிவை மாற்ற படுவதாகவும் கூறப்படுகிறது. அஜித் 61 : அஜித் தனது 61வது படத்தில் வினோத் உடன் மூன்றாவது முறையாக கை கொடுத்து நடித்து வருகிறார் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாகவே தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகுவதுபோல் தெரிய வருகிறது அதனால் தீபாவளி பந்தயத்தில் அஜித் கலந்துகொள்ள மாட்டாராம்.