முடிவுக்கு வந்தது பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல்..! மொத்த கலெக்சன் இத்தனை கோடியா.?

pichaikaran 2
pichaikaran 2

சினிமா உலகில் ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டால் அதன் பார்ட் 2 பார்ட் 3 படங்கள் உருவாகுவது வழக்கம் அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்தது.

அதன்படி பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார். படம் மே 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி உடன் கைகோர்த்து  யோகி பாபு,  ஜான் விஜய், ஷீலா, காவியா தபார் ,  தேவ் கில், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன்,  மன்சூர் அலிகான் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் முழுக்க முழுக்க அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து படம் உருவாகியது அதே சமயம் இந்த படத்தில் காமெடி மற்றும் சில சென்டிமென்ட் சீன்களும் இடம்பெற்று இருந்தன. இதனால் படம் ஒட்டு மொத்த மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது.

இது ஒரு பக்கம் இருந்தாலும்  வசூலிலும் எந்த குறையும் வைக்காமல் ஆரம்பத்தில் இருந்து நன்றாகவே அள்ளி வந்தது. இதனால் சந்தோஷம் அடைந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவு விருந்து வைத்து அசத்தினார். அதன் புகைப்படம், வீடியோக்கள் கூட வெளியானது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை மட்டுமே பிச்சைக்காரன் 2 திரைப்படம் 40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இது தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.