பிச்சைக்காரன் 2 முதல் பாகத்தை வென்றதா.? இதோ முழு விமர்சனம்.!

pichaikkaran 2
pichaikkaran 2

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டுமே இல்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது.

ஆனால் இந்த முறை பிச்சைக்காரன் இரண்டாவது பாகத்தை விஜய் ஆண்டனி அவர்களே இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி எந்த அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை:

விஜய் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் இவர் ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் இவர் இந்தியாவில் ஏழாவது பணக்காரராக இருக்கும் இவரிடமிருந்து பணத்தை அபகரிக்க விஜய் ஆண்டனியின் கம்பெனியில் ceo வாக இருக்கும் அரவிந்த் திட்டம் தீட்டி வருகிறார்.

அந்த சமயத்தில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அரவிந்துக்கு தெரிய வர எப்படியாவது விஜய் குருமூர்த்தி உடலுக்கு வேறு ஒருவரின் மூளையை பொருத்தி தான் சொல்வதை மட்டும் கேட்கும் படி செய்துவிட்டால் தான் நினைக்கும் காரியத்தை ஈசியாக சாதித்து விடலாம் என எண்ணி அதற்காக ஒரு பிச்சைக்காரன் சத்தியாவை தேர்ந்தெடுத்து அவருடைய மூளையை குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்கள்.

பிச்சைக்காரன் சத்தியா சிறு வயதிலேயே தன்னுடைய அப்பா அம்மாவை இழந்து தங்கையுடன் நடுரோட்டிற்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் இப்படி ஒரு சூழ்நிலையில் தன்னுடைய தங்கையையும் தொலைத்து விடுகிறார். சிறு வயதிலேயே தான் தொலைத்த தங்கையை தேடி அலைந்து வரும் சத்தியாவின் மூளை தற்பொழுது இந்தியாவில் ஏழாவது பணக்காரனாக இருக்கும் விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தப்படுகிறது.

அதன் பிறகு சத்யா விஜய் குருமூர்த்தியாக மாறினாரா அதன் பிறகு என்ன நடந்தது, சத்யா தன்னுடைய தங்கையை கண்டுபிடித்தாரா அவருக்கு என்ன ஆனது என்பதை படத்தின் மீதி கதை.

படத்தின் சிறப்பு மற்றும் மைனஸ்

வழக்கம்போல் ஹீரோவாக நடித்துள்ள விஜய் ஆண்டனி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முன் விஜய் ஆண்டனி நடித்ததற்கும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேலும் ஹீரோயின் காவியா தாபர் நடிப்பு ஓகே அது மட்டும் இல்லாமல் ராதாரவி, யோகி பாபு என அனைவரும் தனக்கு கொடுத்த காட்சிகளை கச்சிதமாக நடித்துள்ளார்.

மேலும் சிறுவன் சிறுமியாக நடித்துள்ளவர்களின் நடிப்பு மிகவும் பிரமாதம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் ஏனென்றால் எடுத்து கொண்ட கதைக்களம் அருமையாக இருந்தது எனவும் ஏழை ஏன் ஏழையாகிக் கொண்டே போகிறான் பணக்காரன் ஏன் பணக்காரன் ஆகவே இருக்கிறான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. திரைக்கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம் அது இன்னும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கும் என்னதான் காட்சிகள் நன்றாக இருந்தாலும் VFX மற்றும் கொஞ்சம் சுதப்பிவிட்டது, அதேபோல் படத்தில் ஒரே ஒரு பாடலைத் தவிர மீது எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை வழக்கமாக விஜய் ஆண்டனி இசை என்றாலே ரசிகர்களை வெகுவாக கவரும் ஆனால் இந்த முறை விஜய் ஆண்டனி அதனை மிஸ் செய்து விட்டார்.

மேலும் ஆக்ஷன் காட்சிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள். விஜய் ஆண்டனியின் நடிப்பு இந்த திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது பிச்சைக்காரன் 2 மக்கள் மனதில் நிற்கிறான்.