தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு கலக்கி வருபவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் பொதுவாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் பிச்சைக்காரன். அம்மா சென்டிமென்ட் மையமாக வைத்து உருவாகிறது இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ்சாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் வெற்றினை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் பொழுது விஜய் ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதனால் அவருடைய முகத்தில் மிகவும் அடி விழுந்த நிலையில் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இலையில் தற்பொழுது இவருக்கு முழுவதுமாக குணமாக இருக்கும் நிலையில் பிச்சைக்காரன் 2 பட புரமோஷனில் கலந்துக் கொண்டார். இதில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிச்சைக்காரன் 2 படம் நேற்று மே 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாளில் ரூபாய் 8.5 கோடி வரை தெலுங்கில் வசூல் செய்துள்ளதாம். இது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வசூல் என கூறப்படுகிறது. இவ்வாறு கோடை விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் இதற்கு மேல் படத்தை பார்ப்பார்கள் எனவே இதனால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.