கல்லாப்பெட்டியை நிரப்பிய விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2..! 8 நாள் முடிவில் மட்டுமே இத்தனை கோடி யா.?

pichaikkaran-

திரை உலகில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தன்னை பல வழிகளில் தனது திறமையை வெளிக்காட்டுகின்றனர் அந்த வகையில் விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராக திரையுலகில் கால் தளபதி பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் முதலில் “நான்” என்னும் படத்தில் நடித்து வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா – பாகிஸ்தான், எமன், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த அவர் தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாவது பாகத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் எடிட்டராகவும், இசையமைப்பாளராகவும் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் விஜய் ஆண்டனி உடன் கைகோர்த்து  kaviya thapar, யோகி பாபு, ஒய் ஜி மகேந்திரன் ராதா ரவி மன்சூர் அலிகான் ஜான் விஜய், dev gill, மோகன் ராமன் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.  பிச்சைக்காரன் 2  மே 19 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஆரம்பத்திலேயே பெற்று வசூல் வேட்டை நடத்தியது.  அடுத்த அடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் வேட்டை குறையவே இல்லை இப்படி இருக்கின்ற நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 8 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில்  பிச்சைக்காரன் 2 படம் 8 நாள் முடிவில் சுமார் 30 கோடி வசூல் செய்துள்ளதாம்.. வருகின்ற நாட்களிலும் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.