2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சாட்னா, பகவதி பெருமாள், தீபா ராமானுஜம், ரக்ஷிதா என பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பணக்கார வீட்டு தொழிலதிபர் மகனாக நடித்திருப்பார் இவருடைய தாயார் புவனேஸ்வரி. தன்னுடைய கணவர் இறந்த பிறகு கணவரின் தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் தன்னுடைய தாய் பொறுப்புகளை அனைத்தையும் விஜய் ஆண்டனி மேற்படிப்பை முடித்துவிட்டு அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறார்.
அதன்பிறகு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் தாய் புவனேஸ்வரி பாதிக்கப்படுகிறார் தனது தாயை காப்பாற்ற வேண்டுமென்றால் யாரிடமும் கூறாமல் பிச்சை எடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறிவிடுகிறார் அதனால் நாற்பத்தி எட்டு நாள் யாருக்கும் தெரியாமல் தான் யார் என்று யாரிடமும் கூறாமல் பிச்சை எடுத்து வருகிறார் அதன் பிறகு எப்படி தனது அம்மாவை காப்பாற்றினார், தனது சொத்துக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.
இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி தன்னுடைய சொந்த தயாரிப்பான பிலிம் கார்ப்பரேஷன் மூலம் உருவாக்கியிருந்தார் அதேபோல் இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியை இசையமைத்திருந்தார். மேலும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
அம்மா மகன் பாசத்தால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பிச்சைக்காரர்கள் அம்மாவாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தீபா ராமானுஜம் இவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அருணாச்சலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஹீரோயினாக நடித்த பிறகு அம்மா, அத்தை என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
ஆனால் தற்பொழுது அமெரிக்காவில் தொழிலதிபராக வலம் வருகிறார். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் அடைந்துள்ளார்கள் ஏனென்றால் ultra-modern கேர்ளாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.