பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர்கள் தான் ஆர்யா மற்றும் விஷால் இவர்கள் இருவருமே இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் அண்ணன்,தம்பியாக நடித்திருப்பார்கள் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஷாலின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.
அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை ஆனால் தற்பொழுது இணைந்து நடித்து வருகிறார்கள் இருமுகன்,நோட்டா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் இருவரும் கைகோர்த்து நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும் ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் என்ற நடிகையை நடித்துள்ளார் மேலும் இதில் எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக நடிகர் விஷால் ரசிகர்களுக்கு அதிகாரபூர்வ தகவலை பகிர்ந்தார் அது மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து பலரும் பார்த்திராத புதிய புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்புவது மட்டுமல்லாமல்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் இதனைத் தொடர்ந்து எனிமி திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் கூட்டணி மீண்டும் அமையுமா இல்லையா என ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.